Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
28
50 பேரை மொத்த மக்கள் தொகையாக கொண்ட தனித்தீவில் 10 பேருக்கு கொரோனா.

sooriyan gossip - 50 பேரை மொத்த மக்கள் தொகையாக கொண்ட தனித்தீவில் 10 பேருக்கு கொரோனா.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

139 Views
அந்தமான் நிகோபார்க்கில் பல்வேறு தீவுகள் உள்ளன. இந்த தீவுகளில் பல்வேறு பழங்குடியின மக்கள் சிறுசிறு கூட்டங்களாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று தான் இந்த தீவிற்கு செல்லவேண்டும். மற்றும்படி இந்த தீவுக்கூட்டங்களுக்கு வெளி நபர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அந்தமான் நிகோபார்க் தீவுக்கூட்டங்களில் ஸ்டிரிட் என்ற தீவில் இந்த பழங்குடிகள் வசித்து வருகின்றனர்.

தற்போது கிரேட்டர் அந்தமான் பழங்குடியினரின் மொத்த எண்ணிக்கை 50 என்ற மிகக்குறைந்த அளவிலேயே உள்ளது. இந்த பழங்குடியினத்தை பாதுகாக்கும் வகையில் இவர்களை பாதுகாக்கப்பட்ட இனமாக இந்திய அரசு அறிவித்துள்ளது.


இந்நிலையில் உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தற்போது கிரேட்டர் அந்தமான் பழங்குடியின மக்களையும் விட்டுவைக்கவில்லை. 50 பேரை மொத்த மக்கள் தொகையாக கொண்ட இந்த பழங்குடியினரில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழங்குடியினரில் சிலர் அரசு பணியில் இருப்பதால் அவர்கள் போர்ட் பிளேயரில் உள்ள அரசு அலுவலகம் வந்து தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களிடம் முதலில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த பரிசோதனையில் பழங்குடியினர் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

ஸ்டிரிட் தீவிற்கு மருத்துவக்குழு சென்று அங்கு வாழ்ந்து வரும் கிரேட்டர் அந்தமான் பழங்குடியினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் மேலும் 4 பழங்குடியினருக்கு தொற்று உறுதியானது. இதனால் 50 பேரை மக்கள் தொகையாக கொண்ட கிரேட்டர் அந்தமான் பழங்குடியினரில் 10 பேருக்கு கொரோனா பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர்கள் அனைவரும் போர்ட் பிளேயரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
சிகிச்சை பெற்றவர்களில் 6 பேர் குணமடைந்ததையடுத்து அவர்கள் தீவுக்கு அழைத்து வரப்பட்டு வீட்டுத்தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 4 பழங்குடியினர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

50 பேரை மொத்தமக்கள் தொகையாக கொண்டு ஸ்டிரிட் தீவில் வசித்து வரும் கிரேட்டர் அந்தமான் பழங்குடியினரில் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top