Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
31
சீனாவில் கட்டடம் இடிந்து 29 பேர் பலி

sooriyan gossip - சீனாவில் கட்டடம் இடிந்து 29 பேர் பலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

420 Views
சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஷாங்ஷி மாகாணம் ஜியான்பெங் நகரில் 2 மாடிகள் கொண்ட பழமையான விருந்தகம்  ஒன்று செயல்பட்டு வந்தது.  இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த கிராமத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவரின் பிறந்தநாள் அங்கே  கொண்டாடப்பட்டது. 
இதையொட்டி அந்த முதியவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏராளமானோர் அங்கு வந்திருந்தனர். அப்போது உள்ளூர் நேரப்படி காலை 9.40 மணி அளவில் திடீரென விருந்தகம் இடிந்து விழுந்தது. இதில் இருந்த அனைவரும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி அலறித்துடித்தனர்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக மீட்புப்படையினர், காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மீட்புப்பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுடன் அப்பகுதி மக்களும் சேர்ந்து மீட்பு நடவடிக்கையில் இறங்கினர்.
இந்த நிலையில் கட்டிட இடிபாடுகளில் இருந்து மேலும் 27 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். இதனால் இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் கட்டிட இடிபாடுகளில் இருந்து இதுவரை ஒட்டுமொத்தமாக 28 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேருக்கு பலத்த காயங்களும், 21 பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விருந்தகம் இடிந்து விழுந்ததற்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை என்றும், இது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top