Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
03
OTT தளத்தில் இயக்குனர் பாலாவின் 'வர்மா'......??? - தயாரிப்பாளர் விளக்கம்.

Sooriyan Gossip - OTT தளத்தில் இயக்குனர் பாலாவின் 'வர்மா'......??? - தயாரிப்பாளர் விளக்கம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

132 Views
பிரபல இயக்குனர் பாலாவின் உருவாக்கத்தில் துருவ் விக்ரம் அறிமுகமாகவிருந்த திரைப்படம் "வர்மா". கிட்டத்தட்ட படப்பிடிப்பு நிறைவடையும் தருணத்தில் இருந்தபோது, முரண்பாடு காரணமாக இயக்குனர் பாலா தனது பணியிலிருந்து விலகியமையால் திடீரென கைவிடப்பட்ட இந்தப் படத்தின் கதையில், தெலுங்கு இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் மீண்டும் துருவ் விக்ரம் நடித்து திரை கண்டது "ஆதித்திய வர்மா" 
தமிழ்த் திரையுலகில் தன்னை நிலைநிறுத்த தள்ளாடிக்கொண்டிருந்த நடிகர் விக்ரம் நடிப்புத் துறையில் தடம் பாதிக்கக் காரணமாக அமைந்தவர் இயக்குனர் பாலா. நடிகர் விக்ரமை நடிக்க வைத்து பாலா இயக்கிய "சேது" திரைப்படத்தின் மூலமே 'சீயான்' என்ற அடைமொழியுடன் ரசிகர்களிடம் சென்று சேர்ந்தார் விக்ரம்.

அதேபோன்று தனது மகன் துருவ் விக்ரம் அறிமுகமாகும் படத்தை பாலா இயக்கியபோது அதனால் சந்தோஷமடைந்த விக்ரம், ரசிகர்களிடம் தனக்கு கிடைத்தது போன்றதொரு வரவேற்பு மகனுக்கும் கிடைக்க வேண்டும் என்ற அதீத ஆசையில் படப்பிடிப்பு விஷயங்களில் தேவையில்லாமல் தலையிட்டார். இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டன. இருந்தும், அனைத்தையும் பொறுத்துக்கொண்டு படப்பிடிப்பில் கவனம் செலுத்திய பாலாவிற்கு, திரைக்கதையில் பல மாற்றங்கள் செய்யுமாறு கூறியது பிடிக்கவில்லை.

இந்தநிலையில், "வர்மா" படத்திற்காக எடுத்து முடிக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்த விக்ரம் மற்றும் தயாரிப்புத் தரப்பினர், படம் எதிர்பார்த்த அளவுக்கு விறுவிறுப்பாக இல்லை என்றும், "அர்ஜுன் ரெட்டி" படத்தில் இருந்த உயிரோட்டம் "வர்மா" படத்தில் இல்லை என்றும் கூறியதனால், கொதிப்படைந்த இயக்குனர் பாலா படத்தை நிறுத்த, வேறொரு இயக்குனர் மூலம் மீண்டும் ஆரம்பத்திலிருந்து படமாக்கப்பட்ட "ஆதித்ய வர்மா" படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

இது இப்படியிருக்க, "வர்மா" திரைப்படத்திற்காக தாம் செலவு செய்த தொகையை ஈடு செய்ய, அந்தப் படத்தை தயாரித்த முகேஷ் ரடிலால், இணையத்தினூடாக ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட தீர்மானித்துள்ளதாக சிலகாலமாக கோடம்பாக்கம் கிசுகிசுத்தது. இதனை உண்மையென நம்பிய சில செய்தி இணையத்தளங்களும் அதனை பொதுவெளியில் பகிர்ந்த நிலையில், இந்த செய்தி வதந்தியென தற்போது தெரியவந்துள்ளது.

இவ்வாறு வெளியாகும் செய்தியில் உண்மை இல்லையென்றும், அவ்வாறானதொரு யோசனை தமக்கு கிடையாது என்றும் தயாரிப்பாளர் முகேஷ் ரடிலால் உத்தியோகபூர்வமாக அறிவித்து, இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.இந்தநிலையில், படத்தின் வரவிற்காக காத்திருந்த பாலாவின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top