குஷ்பூ மற்றும் நதியா போன்று இரசிகர்கள் அடிமைகளாய் மாறி இரசித்த ஒரு நடிகை நம்ம அமலாவும் என்றால், அது மிகையல்ல !!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட கடந்த 80-90களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த நடித்த நடிகை அமலா, பின்னர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனனை திருமணம் செய்து கொண்டு குடும்பத்தலைவியாக மாறினார்.
திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து வெளியேறிய அமலா, சமீபத்தில் வெளியான வித்யாபாலன் நடித்த 'ஹமாரி அதுரி கஹானி' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் ஒரு இந்தி திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இந்த படம் குறித்து பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், மிக விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அமலா தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
நல்ல கேரக்டர் கிடைத்தால் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ள அமலா, சின்னத்திரையிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அமலாவுக்கென ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்த தமிழில் அவர் மீண்டும் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-கோடம்பாக்கக் குருவி-