Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
07
3 வயது பச்சிளம் குழந்தை சுட்டுக்கொலை - அமெரிக்காவில் கோரச்சம்பவம்

sooriyan gossip - 3 வயது பச்சிளம் குழந்தை சுட்டுக்கொலை - அமெரிக்காவில் கோரச்சம்பவம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

926 Views
அண்மைக்காலமாக  அமெரிக்காவில்  துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. எனவே துப்பாக்கி வினியோகத்தில்
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் டிரம்ப் தலைமையிலான அரசு இந்த விடயத்தில் தொடர்ந்து அலட்சியமாக இருந்து வருகிறது. இதனால் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.



இந்தநிலையில் லூசியானா சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது மற்றொரு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த காரில் இருந்த 3 வயது பச்சிளம் குழந்தையின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. இதில் அந்த குழந்தை ரத்த வெள்ளத்தில் காருக்குள்ளேயே பரிதாபமாக இறந்தது. மேலும் கார் ஓட்டுநர் பலத்த காயம் அடைந்தார். அவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய மர்ம நபர்கள் யார்? என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை. தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இதனிடையே இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பேடன்ரூஜ் மேயர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் ‘‘இன்று இரவு நடந்தது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த சம்பவத்தால் என் இதயம் கனமானது. இந்தக் குழந்தையின் வாழ்க்கையை சமூகம் மதிக்க வேண்டும். இதை யார் செய்தார்கள் என்பது உங்களுக்கு தெரிந்தால் உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top