Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
08
அச்சுறுத்தப்பட்டார் நடிகை கங்கனா ரணாவத் - வீட்டிற்கு Y+ பாதுகாப்பு

Sooriyan Gossip - அச்சுறுத்தப்பட்டார் நடிகை கங்கனா ரணாவத் - வீட்டிற்கு Y+ பாதுகாப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

125 Views
பொலிவூட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்திற்குப் பின்னர் எழுந்த அதிர்வலைகளாலும், ஹிந்தித் திரையுலக வாரிசு நடிகர்கள் காட்டும் மற்ற நடிகர்கள் மீதான ஆதிக்கம் தொடர்பான திரைத்துறை சார்ந்த பலரது கருத்துக்களாலும் குழம்பிக் கிடக்கின்றது பொலிவூட் திரையுலகு.
இந்தநிலையில், ஒரு சில பிரபல ஹிந்தித் திரையுலக நடிக நடிகையர்களும் வாரிசு நடிகர்களின் தலையீடு குறித்த தகவல்களை தயக்கமோ, பயமோ இன்றி வெளிப்படுத்தியுள்ள நிலையில், அவர்களுக்கான மறைமுக அச்சறுத்தல்கள் எழுந்துள்ளன. அவர்களுள், தற்போது பெரும் சிக்கலை எதிர்கொண்டிருப்பவர் முன்னணி நட்சத்திர நடிகையான கங்கனா ரணாவத்.

'பொலிவூட்'டில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் மற்றும் போதைப் பொருள் பாவனை குறித்து பல உண்மைகளை வெளிப்படுத்தும் கங்கனா ரணாவத், மராட்டிய அரசியல்வாதிகளும், மும்பை காவல்துறையினரும் ஹிந்தித் திரையுலக வாரிசு நடிகர்களுக்கு பெரும் ஆதரவளிப்பதாகவும் நேரடி குற்றச்சாட்டுக்களை பொதுவெளியில் முன்வைத்து வருகின்றார்.

இவ்வாறான கருத்துக்களால் அதிர்ந்துபோன திரையுலகப் பிரபலங்களும், அரசியல்வாதிகளும் தமது எதிர்ப்பை தெரிவித்துவரும் நிலையில், சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இது தொடர்பில் கருத்திடுகையில், "கங்கனா மராட்டியத்தையும், மும்பை காவல்துறையையும் அவமானப்படுத்திவிட்டார். அவருக்கு பயம் இருந்தால் மும்பைக்கு திரும்ப வரவேண்டாம்" என்று தெரிவித்து பயமுறுத்தியுள்ளார்.

தனக்கெதிராக இந்த பகிரங்க அச்சுறுத்தல் குறித்து நடிகை கங்கனா ரணாவத் ஊடகங்களுக்கு கருத்து கூறுகையில், “நான் மும்பைக்கு வரவேண்டாம் என்று பலரும் என்னை அச்சுறுத்துகிறார்கள். வருகிற செப்டம்பர் 9-ந்தேதி மும்பை வருகிறேன். முடிந்தால் என்னை தடுத்துப் பாருங்கள்” என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்திற்கு அதிரடியாக சவால் விடுத்துள்ளார்.

இவ்வாறான பரஸ்பர கருத்துக்களால் நடிகை கங்கனா ரணாவத்திற்கு ஏதும் சிக்கல் நேர்ந்துவிடக்கூடாது என்ற பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக, தற்போது கங்கனா இமாச்சல பிரதேசத்தில் தங்கியுள்ள வீட்டிற்கு அந்த மாநிலத்தின் முதலமைச்சரினால் Y+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top