Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
15
'மல்லுவூட்'டிலும் பரவிக்கிடக்கும் போதைப்பொருள் - தயாரிப்பாளர் குற்றச்சாட்டு.

Sooriyan Gossip - 'மல்லுவூட்'டிலும் பரவிக்கிடக்கும் போதைப்பொருள் - தயாரிப்பாளர் குற்றச்சாட்டு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

140 Views
பொலிவூட்டில் நடிக நடிகையர்களிடம் போதைப்பொருள் புழக்கம் சம்பந்தமான தகவல்கள் வெளியானதுடன், போதைப்பொருள் கடத்தல்காரர்களுடனான தொடர்புகள் குறித்தும் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மல்லுவூட் எனப்படும் மலையாளத் திரையுலகிலும் போதைப்பொருள் பாவனை தொடர்பான செய்திகள் வெளிக்கிளம்பியுள்ளன.
அண்மையில், கன்னடத் திரையுலகில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம், போதைப்பொருள் பாவனையாளர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட நடிகைகளான ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு காவல்துறை விசாரணையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மலையாளத் திரையுலகிலுள்ளவர்களின் போதைப்பொருள் பாவனை குறித்த விஷயங்கள் அம்பலமாகத் தொடங்கியுள்ளன.

இணையத்தளங்களில் வெளியாகும் ஆதாரமற்ற செய்திகளாக அல்லாமல், குடும்பத்திலுள்ளவர்கள் எல்லோருமே திரைத்துறையில் பணியாற்றுகின்ற பிரபலமிக்கவர்களில் ஒருவரான தயாரிப்பாளரும், நடிகை கீர்த்தி சுரேஷ்ஷின் தந்தையுமான சுரேஷ்குமார் பகிரங்கமாக இந்த விஷயத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.

இது குறித்து தயாரிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவிக்கையில், "மலையாளத் திரையுலகிலும் போதைப்பொருள் பாவனை இருப்பதை மறைக்க முடியாது. படப்பிடிப்பு நடைபெறுகின்ற நேரங்களில், தயாரிப்புத் துறையை சார்ந்த உதவியாளர்கள், 'சார்...! கேரவனுக்கு உள்ளே நுழையவே முடியவில்லை. அந்த அளவுக்கு போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் வாடை அடிக்கிறது' என்று அடிக்கடி எம்மிடம் முறையிடும் பல சம்பவங்கள் இன்னும் தொடர்கின்றன" என்று பொதுவெளியில் கூறியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top