Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
18
மணிக்கு 150 கி.மீ வேகத்தில் தூங்கிக் கொண்டே கார் ஓட்டிய நபர்.

Sooriyan Gossip - மணிக்கு 150 கி.மீ வேகத்தில் தூங்கிக் கொண்டே கார் ஓட்டிய நபர்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

389 Views
காரில்  இருந்த ஓட்டுநரும் சக பயணியும் தூங்கியதாக கனடாவில் வழக்கு ஒன்று பதியப்பட்டுள்ளது.

பகுதியளவு தானாக இயங்கக்கூடிய டெஸ்லா கார் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
இந்த சம்பவம் அல்பர்டாவில் நடந்தது.

காரின் முன் இருக்கைகள் இரண்டும், முழுவதுமாக சரிந்திருந்து, அதில் ஓட்டுநரும், சக பயணியும், நல்ல உறக்கத்தில் இருந்ததாக போலீஸசார் தெரிவிக்கின்றனர்.

டெல்ஸா மாடல் எஸ் ரக காரை போலீஸார் கண்டறிந்தபோது, அந்த கார் மணிக்கு 140-150 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தது.

காரை ஓட்டிச்சென்ற பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த 20 வயதான நபர் மீது ஆபத்தான வகையில் வாகனத்தை ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

"நான் 23 ஆண்டுகளாக காவல்துறையில் இருக்கிறேன். பெரும்பாலும் போக்குவரத்து காவல் அதிகாரியாகவே இருந்திருக்கிறேன். இந்த சம்பவம் போல ஒன்றை இதற்கு முன் நான் பார்த்ததே இல்லை. இந்த அளவிற்கு தொழில்நுட்பம் இருந்ததில்லை என்பதும் இருக்கிறது" என அவர் கூறினார்.

டெஸ்லா கார்கள், இரண்டு நிலை ஆட்டோ பைலட் செயல்பாடு கொண்டவை. ஆனால், ஓட்டுநர் எப்போதும் விழிப்புடனே இருப்பது அவசியம்.

முழுவதுமே தானாகவே இயங்கக்கூடிய கார், இந்தாண்டு இறுதிக்குள் தயாரித்து முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top