Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
23
போதை பொருள் வழக்கில் சிக்க போகும் அடுத்த பிரபல நடிகை

sooriyan gossip - போதை பொருள் வழக்கில் சிக்க போகும் அடுத்த பிரபல நடிகைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

700 Views
இளம் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள  தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியபோது, போதைப்பொருள் கும்பலுடன் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. நடிகை ரியா போதைப்பொருள் பயன்படுத்தியதுடன், சுஷாந்த் சிங்கிற்காகவும் போதைப்பொருள் வாங்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து நடிகை ரியா, அவரது தம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர், வேலைக்காரர் மற்றும் போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவர்கள் என 12 க்கும் மேற்பட்டவர்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். கைதான ரியா உள்ளிட்டவர்கள் கொடுத்த தகவலின்பேரில் பிரபல நடிகை ரகுல்பிரீத் சிங், ஹிந்தி நடிகை சாராஅலிகான், ஆடைவடிவமைப்பாளர் சிமான் கம்பாட்டா ஆகியோருக்கு இந்த வாரம் அழைப்பாணை அனுப்பப்படும் என போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

நேற்று முன்தினம் சுஷாந்த் சிங்கின் திறன் மேலாளர் ஜெயாஷாவிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதும். மேலும் சில சினிமா பிரபலங்கள் குறித்து திடுக்கிடும் தகவலை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணைக்கு சமுகமளிக்குமாறு பிரபல ஹிந்தி நடிகை தீபிகா படுகோனேயின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ் மற்றும் திறன் மேலாண்மை நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி துருவ் ஆகியோருக்கும் ஆகியோருக்கும் அழைப்பாணை அனுப்பி உள்ளனர். இதனால் போதைப்பொருள் வழக்கில் நடிகை தீபிகா படுகோனேயும் சிக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாங்கள் முதலில் கரிஷ்மா பிரகாசிடம் விசாரணை நடத்துவோம். அதன்பிறகு தேவைப்பட்டால் நடிகை தீபிகா படுகோனேக்கு அழைப்பாணை அனுப்பப்படும்” என்றார். இந்த தகவல் வெளியாகி இருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அடுத்தடுத்த நாட்களில் இன்னும் சிலரின் பெயர்கள் வெளிவரலாம் என கருதப்படுவதால், திரையுலகம் கலக்கம் அடைந்துள்ளது.

இதற்கிடையே நடிகை ரியா சக்ரவர்த்தியின் 14 நாட்கள் நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து நேற்று அவர் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அப்போதும் அவருக்கு நீதிமன்றம் பிணை அளிக்க மறுத்து விட்டது. அடுத்த மாதம் 6 திகதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து நடிகை ரியா நேற்று மும்பை உயர்நீதிமன்றத்தில் பிணை கேட்டு மனு செய்தார். அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top