Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
23
'சூப்பர்ஸ்டார்' ரஜினி புகழ் பாடும் நிவேதா தோமஸ்

Sooriyan Gossip - 'சூப்பர்ஸ்டார்' ரஜினி புகழ் பாடும் நிவேதா தோமஸ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

137 Views
கொரோனா உலகப் பரவல் தொற்று காரணமாக முடங்கிப்போயுள்ள தமிழ்த் திரைத்துறையிலிருந்து திரைப்படங்கள் பெருமளவில் வெளியாகாமையினால், ரசிகர்கள் தங்களை பற்றிய ஆர்வத்திலிருந்து விடுபட்டுவிடாமல் தக்கவைக்கும் முயற்சியில் நடிக நடிகைகள் பல்வேறு வழிகளிலும் முயன்றுகொண்டிருக்கின்றனர்.
பல முன்னணி நட்சத்திரங்கள் கூட சமூக வலைத்தளங்கள், காணொளிகள், ஊடக பேட்டிகள் மூலமாக தமது ரசிகர்களுடனான தொடர்பை தொடர்ச்சியாகப் பேணிவரும் நிலையில், நடிகை நிவேதா தோமஸ் அண்மையில் தனது திரையுலக அனுபவங்கள் குறித்து பொதுவெளியில் ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

பேட்டி என்று வந்துவிட்டாலே 'சூப்பர்ஸ்டார்' ரஜினி பற்றி சில விஷயங்களைப் பேசி ரஜினி ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதை பொதுவாக வளர்ந்துவரும் எல்லா நடிக நடிகைகளும் கடைப்பிடிப்பது வழக்கமாக உள்ள நிலையில், நிவேதா தோமஸ் "தர்பார்" திரைப்படத்தில் ரஜினியின் மகளாக வேடமேற்று அவருடன் சேர்ந்து நடித்த அனுபவத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில் “ரஜினிகாந்துடன் ஒரு காட்சியில் நடித்தால் போதும் நடிகர் அங்கீகாரம் கிடைத்து விடும் என்று ஆசைப்படுபவர்கள் பலர் உள்ளனர். எனது அதிர்ஷ்டம் அவருக்கு மகளாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ரஜினி வயதில் மட்டும்தான் பெரியவர். ஆனால் படப்பிடிப்பு அரங்கில் சிறிய வயதுக்காரர் மாதிரி துள்ளி குதித்துக்கொண்டு இருப்பார்.

என்னை மாதிரி இளைய வயதுக்காரர்கள் சும்மா உட்கார்ந்து இருப்போம். ஆனால் அவர் அங்கும் இங்கும் போய் வந்து கொண்டு சுறுசுறுப்பாக இருப்பார். என்னை முதல் தடவை பார்த்ததும் அட இந்த பெண்ணா நல்லா நடிக்குது இவரோட படங்களையெல்லாம் நிறைய பார்த்து இருக்கிறேன் என்று இயக்குனரிடம் அவர் சொன்னபோது எனக்கு பெருமையாக இருந்தது.

படப்பிடிப்பு அரங்கில் சுற்றி என்ன நடக்கிறது என்பதையெல்லாம் கவனிப்பார். அவருடன் உட்கார்ந்து இருந்தால் நமக்கு சத்தான உணவு, ஆன்மிக விஷயங்கள் பற்றி தெளிவாக சொல்வார். நாம் எவ்வளவு படித்தாலும் எவ்வளவு பெரிய ஆன்மீகவாதிகளின் பிரசங்கங்களை கேட்டாலும் அவ்வளவு தெளிவு வராது. இந்த வயதில் கூட அவர் தினமும் இரண்டு வேளை உடற்பயிற்சி செய்கிறார். உணவு கட்டுப்பாட்டை கடுமையாக கடைபிடிக்கிறார். இதுதான் அவரது இளமை மற்றும் சுறுசுறுப்பின் ரகசியம். அவரிடம் இந்த மாதிரி நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.” என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார் நடிகை நிவேதா தோமஸ்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top