Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
24
பூரண உடல்நலத்துடன் இருக்கின்றார் விஜயகாந்த் - தேமுதிக அறிக்கை.

Sooriyan Gossip - பூரண உடல்நலத்துடன் இருக்கின்றார் விஜயகாந்த் - தேமுதிக அறிக்கை.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

113 Views
'உலகநாயகன்' கமல்ஹாசன் மற்றும் 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் ஆகியோர் திரைவானில் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்துக்கொண்டிருந்த நேரத்தில், அவர்களுக்கு ஈடாக தனது ரசிகர் வட்டத்தை வைத்திருந்த நடிகர் என்பதைக் கடந்து, ஒரு மனிதாபிமானமுள்ள நல்ல மனிதராகவும் திகழ்ந்தவர் நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த்.
நடிப்புத்துறையிலிருந்து நேரடியாக கட்சி ஆரம்பித்து அரசியலில் நுழைந்த விஜயகாந்த், அங்கும் தனது ஆளுமையை வெளிப்படுத்தியதோடு தமிழ்நாட்டின் எதிர்கட்சித் தலைவராகவும் வந்து, தமிழ்நாட்டின் ஆட்சி கட்டிலில் மாறி மாறி அமரும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக என்பவற்றுக்கு பெரும் கிலி ஏற்படுத்தியிருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவினால் தளர்ந்துபோனதுடன், தற்போதுவரை அதிலிருந்து முழுமையாக மீண்டு வரவில்லை.

இருந்தும், ஓரளவுக்கு தனது இயல்பு நிலைக்குத் திரும்பி அரசியல் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், விஜகாந்த்திற்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சென்னை மணப்பாக்கம் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால், விஜயகாந்த் குடும்பத்தினர், நலன்விரும்பிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

இது இப்படியிருக்க, விஜயகாந்த் ஆரம்பித்த தேமுதிக கட்சி தற்போதைய அவரது உடல்நிலை பற்றிக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், "விஜயகாந்த் அவர்கள் 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக மருத்துவமனை செல்வது வழக்கம். வழக்கமான பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றபோது கொரோனா அறிகுறி தென்பட்டது. கொரோனா அறிகுறி இருந்ததால் சிகிச்சை பெற்ற விஜயகாந்த் தற்போது பூரண நலமுடன் உள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top