Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
01
இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமையால், பரிதாப மரணம்

Sooriyan Gossip - இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமையால், பரிதாப மரணம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

216 Views
இந்தியாவிலுள்ள பல்ராம்பூர் பகுதியில், இளம்பெண்ணொருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பரிதாபமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கூட்டுப்பாலியல் சம்பவங்கள் இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற்று வருகின்றமை தொடர்பில், இந்திய காவல்துறையினர் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும், இத்தகைய கோரச்செயல்கள் அவ்வப்போது செய்திகளாக வெளிவந்து பெரும் பீதியைக் கிளப்புகின்றன.

கடந்த 14 ஆம் திகதி, இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் வசித்து வந்த இளம்பெண்ணொருவரை 4 பேர் கடத்திச் சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தமையால், அந்தப் பெண் பரிதாபமாகப் பலியானார்.

இந்த சம்பவத்தை அடுத்து, அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்துவரும் நிலையில், தற்போது மற்றுமொரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை அதே மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

உத்தர பிரதேசம் பல்ராம்பூர் அருகே பணிக்குச் சென்ற 22 வயது இளம்பெண்ணை ஒரு கும்பல் கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கோரமான முறையில் கொலை செய்துள்ளமை, பெண்கள் மத்தியில் அதிக பீதியைக் கிளப்பியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தற்போது அப்பகுதி காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், வெகு விரைவில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் இந்திய காவல்துறையினர், ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top