Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
02
மகிழ்ச்சியில் 'பாலா'வின் ரசிகர்கள் - வெளியாகும் "வர்மா"

Sooriyan Gossip - மகிழ்ச்சியில் 'பாலா'வின் ரசிகர்கள் - வெளியாகும் "வர்மா"Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

119 Views
நடிகர் துருவ் விக்ரமின் அறிமுகத் திரைப்படமான "வர்மா"  பாலாவின் இயக்கத்தில் உருவாகி முழுமையடைத்திருந்த நிலையில், தயாரிப்புத் தரப்பிற்கும் நடிகர் விக்ரமிற்கும் படம் பற்றிய திருப்தியின்மை காரணமாக கைவிடப்பட்டதுடன், "ஆதித்திய வர்மா" என்ற பெயரில் மீண்டும் வேறொரு இயக்குனர் மூலம் படமாகி திரை கண்டதுடன் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
தெலுங்கில் "அர்ஜுன் ரெட்டி" என்ற பெயரில் வெளிவந்த படத்தின் மீளுருவாக்கமாக, தமிழில் "வர்மா" என்ற பெயரில் இயக்குனர் பாலா தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையிலும், தன்னுடைய பாணியிலுமாக படத்தை உருவாக்கியிருந்தார். இருந்தும், 'அர்ஜுன் ரெட்டி' படத்தைப் போன்ற விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் "வர்மா"வில் காணப்படவில்லை என்று நடிகர் விக்ரம் கருதிய நிலையில் படம் கைவிடப்பட்டது.

இது இப்படியிருக்க, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலினால், அண்மைக்காலமாக புதிய திரைப்படங்கள் எவையும் வெளிவராத நிலையில், இயக்குனர் பாலா இயக்கிய "வர்மா"வை தூசு தட்டி OTT தளத்தில் வெளியிட்டு, படத்திற்காக செலவு செய்து இழந்த தொகையை ஈடு காட்டும் முயற்சியில் தயாரிப்புத் தரப்பு ஈடுபடுவதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

இவ்வாறு வெளியாகும் செய்திகள் உண்மையல்ல, போலியாக பரப்பப்படும் செய்திகளை நம்பாதீர் என தயாரிப்புத் தரப்பு முன்னர் அறிவித்திருந்தது என நாம் கூறியிருந்தோம். தற்போது, அந்த செய்திகளை உறுதிப்படுத்தி தயாரிப்புத் தரப்பு வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில், எதிர்வரும் 6ம் திகதி செவ்வாய்க்கிழமை பாலாவின் "வர்மா" திரைப்படம் சிம்ப்லி சவுத் என்கிற OTT தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top