Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
05
டயட் கட்டுப்பாட்டால், பரிதாபமாகப் பலியான நடிகை

SooriyanFM Gossip - டயட் கட்டுப்பாட்டால், பரிதாபமாகப் பலியான நடிகைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

287 Views
திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள், தனது அதிகரித்த உடல் எடையைக் கட்டுப்படுத்த, பல்வேறு உடற்பயிற்சிகளையும், டயட் கட்டுப்பாடுகளையும் பின்பற்றுவார்கள். 

ஆரோக்கியமான உணவுகளுடன், பாதுகாப்பான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம், எமது உடல் நலம் சீராக இருப்பதுடன், உடல் சிறந்த கட்டமைப்பையும் பெறும்.

எனினும் சில பிரபலங்கள், குறைந்த நாட்களிலேயே தனது உடல் எடியைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பல தவறான செயற்பாடுகளை முன்னெடுத்து, தமது உடல் ஆரோக்கியத்தை சீரழித்துக் கொள்கின்றனர்.

இது போன்ற ஒரு சம்பவத்தால், இந்தி திரையுலகின் பிரபல இளம் நடிகை ஒருவர், பரிதாபமாகப் பலியான சம்பவம் தற்போது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியில் வெளியான சில படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை மிஸ்டி முகர்ஜி, தனது தவறான டயட் கட்டுப்பாட்டால், மரணித்ததாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர் தனது உடல் எடையை அதிகரிக்கும் நோக்கில், தீவிரமான உணவுக் கட்டுப்பாடு முறையினை பின்பற்றி வந்துள்ளார்.
இதன் காரணமாக இவரது சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து நடிகை மிஸ்டி முகர்ஜி, தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.

எனினும் நடிகை மிஸ்டி முகர்ஜி, சிகிச்சைப் பலனின்றி, பரிதாபமாகப் பலியானதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த செய்தி அறிந்த பல திரைத்துறையின் பிரபலங்கள், மிகுந்த வேதனையுடனும், அச்சத்துடனும் இருப்பதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top