Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
08
இப்படியொரு ஆபாசம், தமிழ் சினிமாவிற்கு ஆகாது - ‘'இரண்டாம் குத்து'’ படத்திற்கு பாரதிராஜா கடும் கண்டனம்

Sooriyan Gossip - இப்படியொரு ஆபாசம், தமிழ் சினிமாவிற்கு ஆகாது - ‘'இரண்டாம் குத்து'’ படத்திற்கு பாரதிராஜா கடும் கண்டனம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

179 Views
''இரண்டாம் குத்து'' திரைப்பட போஸ்டருக்கு கடும் கண்டனம் தெரிவித்து மூத்த இயக்குனரும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயரிப்பாளர் சங்க தலைவருமான பாரதிராஜா கருத்து வெளியிட்டுள்ளார். 

குறித்த கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது, சினிமாவினால் சாதி ஒழிப்பு சாத்தியப்பட்டிருக்கிறது. மதம் கடந்த மனங்கள் இணைவது சாத்தியப் பட்டிருக்கிறது. நேர்மையும் துணிவும் கொண்ட இளைஞர்களை உருவாக்குவது, சாத்தியப்பட்டிருக்கிறது.

உலகம் எங்கும் தமிழர் பண்பாடு, மண்ணின் மணம் பரப்புவது, பெண் சுதந்திரம் போன்ற எத்தனையோ சாத்தியமற்றவைகள் சாத்தியப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் சாதாரணமல்ல.
பல கலைஞர்கள் கட்டியமைத்த கூடு. தார்மீகப் பொறுப்புகளோடு சமூக பாதிப்புகள் நேராது கண்ணியத்தோடு பேணிக் காத்த சினிமாவை, இன்று வியாபாரம் என்ற போர்வையில் கண்ணியமற்று சீரழிக்கிறோமோ என்ற கவலை வந்து விட்டது.

சினிமா வியாபாரமும் தான்... ஆனால் வாழைப்பழத்தை பயன்படுத்தி கேவலமான பதிவோடு பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் நிலைக்கு அந்த வியாபாரம் வந்து நிற்பது வேதனையடையச் செய்கிறது. இதற்காகவா இத்தனை ஜாம்பவான்கள் சேர்ந்து இந்த சினிமாவைக் கட்டமைத்தார்கள்? சினிமா வாழ்க்கை முறையைச் சொல்லலாம். தப்பில்லை.

நான் கலாச்சார சீர்கேடு எனக் கூவும் நபரல்ல. ஆனால் என் வீட்டின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என நினைப்பவன். கலைநயத்தோடு செய்யப்படும் எந்த படைப்பையும் அதிகமாக இரசிப்பவன் நான். ஆனால் “இரண்டாம் குத்து” என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன்.

இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனையோ நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்? கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்? இதையெல்லாம் அனுமதியின்றி வெளியிடக் கிடைத்த சுதந்திரம் என்னை பதைக்க வைக்கிறது... நாளை இன்னும் என்ன என்ன கேவலங்களை தருவார்களோ? என்று கவலைகொள்கிறேன்.

இதையெல்லாம் செய்பவர்கள் வீட்டில், பெண் மக்கள் இல்லையா?? அவர்கள் இதைக் கண்டிக்க மாட்டார்களா? அவர்கள் கண்டிப்பார்களோ இல்லையோ நான் இங்கிருக்கும் மூத்தவர்களில் ஒருவன் என்ற முறையில் கண்டிப்பேன்.

இப்படியொரு ஆபாசம் தமிழ்த் திரையுலகிற்கு ஆகாது எனக் கண்டிக்கிறேன். எத்தனை கற்பழிப்புகள்...? குழந்தைச் சிதைவுகள்?

இது போன்று இப்படிப்பட்ட படங்களும், சிந்தனையும் கழிவுகளையே தருகின்றன என்பதை, மக்களும் உணர்ந்து கொள்ளுங்கள் என, கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top