ஊரடங்கில், உடல் எடை கொஞ்சம் கூடி விட்டது...
SooriyanFM Gossip - ஊரடங்கில், உடல் எடை கொஞ்சம் கூடி விட்டது...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
தமிழ்த்திரையுலகில் தீபாவளி, ஆர்யா, அசல், வாழ்த்துக்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை பாவனா.
கேரளாவைச் சேர்ந்த நடிகை பாவனா, தமிழ் மாத்திரமல்லாது கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார். நடிகை பாவனா கன்னடத் தயாரிப்பாளரும், கேரளாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபருமான நவீன் என்பவரைக் காதலித்துக் கரம் பிடித்தார்.
நல்ல கதை கொண்ட படம் கிடைத்தால், நிச்சயமாக மீண்டும் திரையில் ஜொலிக்கக் காத்திருப்பதாக, நடிகை பாவனா ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது நடிகை பாவனா, தனது புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். ஊரடங்குக் காலத்தில் உடல் எடை சற்று அதிகரித்து விட்டதாகக் கூறி, நடிகை பாவனா தனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள், உடல் எடை அதிகரித்த போதிலும் நடிகை பாவனா மிகுந்த அழகாக இருப்பதாக கூறியுள்ளனர்.
அத்துடன் ரசிகர்கள் பலர், குறித்த படத்தை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.