மலைப்பாம்புடன், நீச்சல் குளத்தில் களமிறங்கிய சிறுமி
Sooriyan Gossip - மலைப்பாம்புடன், நீச்சல் குளத்தில் களமிறங்கிய சிறுமிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
இஸ்ரேலிலுள்ள 8 வயது சிறுமி ஒருவர், தனது செல்லப்பிராணியான மலைப்பாம்புடன் நீச்சல் குளத்தில் விளையாடியமை, பார்வையாளர்களை பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
11 அடியைக் கொண்ட மலைப்பாம்புடனேயே, குறித்த சிறுமி விளையாடியுள்ளார். குறித்த சிறுமி, தனது பெற்றோருடன் தெற்கு இஸ்ரேலிலுள்ள விலங்குகள் சரணாலயமொன்றில் வசித்து வருகின்றார்.
இந்த சிறுமி, சரணாலயத்தில் உள்ள 11 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தனது செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார். தற்போது கொரோனா பாதிப்புக்கள் காரணமாக, இஸ்ரேலிலுள்ள பல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டமையால், குறித்த சிறுமி தனது செல்லப்பிராணியான மலைப்பாம்புடன், அதிகமான நேரத்தை செலவிட்டுள்ளார்.
இந்த நிலையில் திடீரென நீச்சல் குளத்திற்கு தனது மலைப்பாம்புடன் வந்த சிறுமியைக் கண்டவர்கள், மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
எனினும் தனக்கு மலைப்பாம்பு என்றால் மிகவும் பிடிக்கும். பாம்புகளை அதிகமாகவே நேசிக்கின்றேன் என, குறித்த சிறுமி கூறியுள்ளார்.