Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
17
தாய்ப்பாலைத் தவிர்க்கும் தாய்மார்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!

SooriyanFM Gossip - தாய்ப்பாலைத் தவிர்க்கும் தாய்மார்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,773 Views
தாய்ப்பாலின் அவசியம் குறித்து, இன்று வரை உலக நாடுகள் அதிக விழிப்புணர்வுகளை முன்னெடுத்து வருகின்றது. இக்கால தாய்மார்கள் பலர், தமது குழந்தைகளுக்கு உரிய வகையில் தாய்ப்பாலைக் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகின்றது. 

தாய்ப்பாலைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால், தமது அழகு குறைந்து விடும் என்ற தவறான கருத்தால், பல பெண்கள் இன்றும் தமது குழந்தைகளுக்கான தாய்ப்பாலைக் கொடுக்க தவறுகின்றனர்.

இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்து, மருத்துவ நிபுணர்கள் அதிகமாகவே எச்சரிக்கை விடுத்து வருகின்றார்கள்.

தாய்ப்பாலைக் கொடுக்கத் தவறும் தாய்மார்களுக்கு, மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக, மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன் தாய்ப்பாலைக் கொடுக்காது விட்டால், தாய்மார்களின் மார்பகத்தில் தேவையற்ற ஊளைச்சதை உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலுள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழகம், தாய்ப்பாலைக் கொடுக்கத் தவறும் தாய்மார்களைக் கொண்டு ஆய்வொன்றை நடத்தியது.

56000 தாய்மார்களிடம் முன்னெடுத்த ஆய்வின் முடிவிலேயே மேற்குறிப்பிட்ட தகவல் வெளியானது. தாய்ப்பாலைக் குழந்தைகளுக்குக் கொடுக்காதவிடத்து, அந்த தாய்மார்கள் அதிகமாக மன அழுத்தம், மூளை தொடர்பான பிரச்சனைகளுக்கு உள்ளாவதாக கண்டறியப்பட்டுள்ளது.

எனினும் முறையாக தனது குழந்தைகளுக்குத் தாய்ப்பாலைக் கொடுத்த தாய்மார்களின் ஆரோக்கியம், மிகச் சிறப்பாக இருந்தமையும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

எனவே கர்ப்பம் தரித்துள்ள அனைத்து பெண்களும், தமது குழந்தையைப் பெற்றெடுத்தவுடன், உரியவாறு தாய்ப்பாலைக் கொடுத்து தனது ஆரோக்கியத்தையும், குழந்தையின் ஆரோக்கியத்தையும் பேணிப் பாதுகாக்குமாறு, குறித்த பல்கலைக்கழத்தில் ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top