Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
20
'நான் அப்படிப்பட்டவள் அல்ல' என்கிறார் நடிகை ஹரிப்பிரியா

Sooriyan Gossip - 'நான் அப்படிப்பட்டவள் அல்ல' என்கிறார் நடிகை ஹரிப்பிரியாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

743 Views
திரையுலகம் சார்ந்தோரிடையே போதைப்பொருள் பாவனை குறித்த செய்திகள் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிரவைத்துக்கொண்டிருக்கும் நிலையில், மேற்கொள்ளப்படும் காவல்துறை விசாரணைகளும், கைது நடவடிக்கைகளும் பல முன்னணி நட்சத்திரங்களை கிலி கொள்ள வைத்திருக்கின்றது.
கன்னடத் திரையுலகில் ஆரம்பித்த போதைப்பொருள் பாவனை தொடர்பான விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகள் பொலிவூட், மல்லுவூட் என நீண்டு செல்கின்ற நிலையில், இது பற்றிய விஷயங்கள் அண்மைய நாட்களில் பலரது பேசுபொருளாகவும் மாற்றியிருக்கின்றன. இந்த சர்ச்சை குறித்து கன்னடத் திரையுலகின் பிரபல நடிகையான ஹரிப்பிரியாவிடம் ஊடகத்துறையினர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதன்போது நடிகை ஹரிப்பிரியா தனது கருத்தை தெரிவிக்கையில், "எனக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இல்லை. நான் ஊடகங்களில் வந்த செய்திகளைப் பார்த்துதான் கன்னட நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படும் செய்தியை தெரிந்து கொண்டேன். நான் எந்த விருந்து நிகழ்ச்சிகளுக்கும் இதுவரையில் சென்றதில்லை.


போதைப்பொருள் விவகாரத்தில் தவறு செய்தவர்களின் பெயர்களை காவல்துறையினர் பகிரங்கப்படுத்துவது மிக முக்கியம். என்னைப் பொறுத்தவரைக்கும் இப்படியான சிக்கல்களில் ஈடுபடாமல் நான் மிகுந்த பாதுகாப்பாக இருந்து வருகிறேன். கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி கிடந்தேன். தற்போது திரைப்பட படப்பிடிப்புக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதனால் மிக மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் எனது பணியில் கவனம் செலுத்துகின்றேன்" என்கிறார் இந்த கன்னடத்து சிட்டு.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top