Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
20
உங்கள் உணவில் இவற்றை அதிகமாகச் சேர்த்தால் ஆபத்து!

SooriyanFM Gossip - உங்கள் உணவில் இவற்றை அதிகமாகச் சேர்த்தால் ஆபத்து!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,516 Views
ஆரோக்கியமான உடலைப் பெறுவதற்கு  நம்மில் பலர், சில உணவுகளை அதிகமாக உண்பார்கள். எனினும் உடலுக்கு நன்மைத் தரும் உணவுகள் என்பதற்காக, அவற்றை அளவிற்கு அதிகமாக உட்கொண்டால், நிச்சயமாக பல பாதிப்புக்கள் ஏற்படும் என, மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

எலுமிச்சை, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைப்பதுடன், சருமத்தின் அழகை மேம்படுத்த பெரிதும் உதவுகின்றது. எனினும் அளவிற்கு அதிகமாக எலுமிச்சையை எடுத்துக் கொண்டால், குடல்புண் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதயம் பலவீனமாகும் என கூறப்படுகின்றது.

அஜீரணக் கோளாறுகளைப் போக்கும் சக்தி இஞ்சியில் அதிகமாகவே உள்ளது. அத்துடன் இஞ்சி சளியை வெளியேற்றும் என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்த விடயமே. எனினும் அளவிற்கு அதிகமாக இஞ்சியைச் சேர்த்து கொள்வதனால், வாய்துர்நாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

எண்ணெய் அதிகமாக சேர்க்கப்பட்ட உணவுகளை அதிகமாக உண்பவர்களுக்கு, அடிக்கடி வயிற்றுவலி ஏற்படும் அபாயம் உள்ளது. அத்துடன் எமது உணவில் சுவைக்காக அதிக உப்பைச் சேர்ப்பது ஆரோக்கியமானதாக இருக்காது. அதிக உப்பைச் சேர்த்துக் கொள்வதால், உடல் எடை அதிகரிப்பதோடு, மூட்டு தொடர்பான பிரச்சினை, சிறுநீரக கோளாறுகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீ மற்றும் கோப்பியை அதிகமாக விரும்பிக் குடிப்பவர்களுக்கு உடல் நடுக்கம் உண்டாகும். அத்துடன் பசியின்மை, நித்திரையின்மை, கண்ணெரிச்சல், பித்தம், நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதுடன், உடல் வெப்பமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top