Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
22
'விஜய் மக்கள் இயக்கம்' அரசியல் கட்சியாகின்றது.....???

Sooriyan Gossip - 'விஜய் மக்கள் இயக்கம்' அரசியல் கட்சியாகின்றது.....???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

178 Views
தனது தந்தையின் திருவாயால் அடிக்கடி சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் நடிகர்களில் மிக முக்கியமானவரான 'தளபதி' விஜய், மீண்டும் குழப்பத்தில் உள்ளதாக கோடம்பாக்கம் சொல்கின்றது.

பிரபல இயக்குனரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் பொதுவெளியில் ஏதேனும் ஒன்றை கதைக்கப்போய் அது ஊடகங்களால் பெரிதாக்கப்பட்டு பின்னர் 'தளபதி' விஜய்க்கு தலைவலியை ஏற்படுத்தாமல் அந்தப் பிரச்சனை ஓய்ந்ததில்லை.

தமிழ்நாடு மாநிலங்களவைத் தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், திரைத்துறை சார்ந்த பல முன்னணி பிரபலங்கள் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து வருவதாக, அந்தக் கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் தெரிவிக்கும் நிலையில், குறித்த திரைத்துறைப் பிரபலங்களின் பெயர்ப் பட்டியலில் எஸ்.ஏ.சந்திரசேகரும் இருப்பதாக பரவலாக பேசப்பட்டது.

இதனை மறுத்து முன்னர் கருத்து வெளியிட்டிருந்த இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், மறுபடியும் இப்படியான வதந்திகள் தொடர்ந்தும் பரவி வருவதால் மீண்டுமொரு மறுப்பு அறிக்கையை ஊடங்கங்களுக்கு வழங்கியதுடன், தான் ஏன் பாஜக வில் இணையப்போவதில்லை என்பதற்கான காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மறுப்பு அறிக்கையில் எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் தெரிவிக்கையில், ''நான் பாஜகவில் இணையப்போகிறேனா என்ற கேள்விக்கே இடமில்லை. எனக்கென்று ஒரு அமைப்பு இருக்கிறது. அது தான் 'விஜய் மக்கள் இயக்கம்'. இது தேவைப்படும் போது அரசியல் கட்சியாக மாறும். மக்கள் அழைக்கும் போது நாங்கள் அரசியலுக்கு வருவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மாநிலங்களவை தேர்தல் வரவுள்ள நிலையில், தேவை ஏற்படும்போது 'விஜய் மக்கள் இயக்கம்' அரசியல் கட்சியாக மாறும் என்ற எஸ்.ஏ.சந்திரசேகரின் கருத்து தனக்கு பெரும் தலைவலியை கொடுத்துவிடுமோ என்ற கலக்கத்தில் 'தளபதி' விஜய் இருப்பதாக விஜய்க்கு நெருக்கமான வட்டம் கிசுகிசுக்கின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top