உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸில் இருந்து விடுபடுவதற்காக. பல நாடுகள் தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் தமது தடுப்பூசியைத் தயாரிக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. இதனிடையே ரஷ்ய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி, தற்போது உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதிக்காக, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி அனைவருக்கும் பலனளிக்காது என, இங்கிலாந்து தடுப்பூசி பணிக்குழுவின் தலைவர் கேட் பின்ஹம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
65 வயதிற்கு மேற்பட்ட மக்கள் மத்தியில், இந்த தடுப்பூசி முழு வீரியமாக செயல்படும் என்பதில் உறுதியில்லை என, இங்கிலாந்து தடுப்பூசி பணிக்குழுவின் தலைவர் கேட் பின்ஹம் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியைத் தொடர்ந்து மக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.