இத்தாலியில் பச்சை நிறத்தில் நாய்க்குட்டி ஒன்று பிறந்திருக்கிறது.
இந்த நாய்க்குட்டியின் பெயர் பிஸ்தா.
இதனுடன் பிறந்த சகோதரக்குட்டிகள் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன. இந்த பிஸ்தா நாய்குட்டி மட்டும் பச்சை நிறத்தில் காணப்படுவதால் சமூக வலைத்தளங்களில் பிரபல்யமாகி வருகிறது.
கருவில் இருக்கும் போது பச்சைவடிவமான பில்வர்டின் இதன்மீது பட்டதால் இந்த நிறம் வந்திருக்கலாம்.
பச்சை நிறம் நம்பிக்கையின் நிறமாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த பிஸ்தா நாய்க்குட்டி பிரபல்யமாகி வருகிறது.