நடிகர் ரஜினிகாந்த் இந்த வருடம் அரசியல் கட்சி துவங்குவார் என்றும்,வருகின்ற தேர்தலில் போட்டியிடுவார் என்றும் பலரால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்.சமூக வலைதளங்களில் ஒரு அறிக்கை வைரலாகி வருகிறது.
அவ் அறிக்கையில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் மற்றும் உடல் நலன்,வயது,தடுப்பூசி இல்லாமை காரணமாக அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று ரஜினிகாந்த் எழுதியது போல ஒரு அறிக்கை வெளியானது.
தற்போது ரஜினிகாந்த் தனது டிவிட்டர் தளத்தில் இதற்கு பதிலளித்துள்ளார்.அவர் கூறும்போது "எனது அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும்,ஊடகங்களிலும் தீவிரமாக பரவிக்கொண்டு வருகிறது.அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்,இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை,இதுபற்றி தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன்" என்று கூறியுள்ளார்.