Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
02
தாழ்த்தப்பட்ட ஜாதி என்பதற்காக அரங்கேறிய கொலை - பதற வைக்கும் உண்மைச் சம்பவம்

Sooriyan Gossip - தாழ்த்தப்பட்ட ஜாதி என்பதற்காக அரங்கேறிய கொலை - பதற வைக்கும் உண்மைச் சம்பவம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,665 Views
இந்தியாவிலுள்ள பல பகுதிகளில் இன்றும் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தப்படும் நபர்கள் பல வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள். 

குறிப்பாக காதல் திருமணங்கள் செய்துகொள்ளும் பலர், ஜாதியைக் காரணம் காட்டி தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன.

இதுபோன்ற ஒரு சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் அரங்கேறியுள்ளது. செங்கல்பட்டு பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வந்த 26 வயதான இளைஞர் ஒருவர், அப்பகுதியில் உள்ள பெண்ணொருவரைக் காதலித்து வந்தார்.

இவரது காதலை குறித்த பெண்ணிடம் தெரியப்படுத்திய போது, குறித்த பெண்ணும் காதலை ஏற்றுக்கொண்டார். எனினும் இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

குறித்த இளைஞர் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர் என குறிப்பிட்டு, பெண் வீட்டார் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து குறித்த இளைஞரும், அந்த பெண்ணும் தத்தமது குடும்பத்தாருக்குத் தெரியப்படுத்தாமல், ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த குறித்த பெண்ணின் குடும்பத்தார், பாதாள உலகக் குழுவினர் துணையுடன் இளைஞரைக் கொலை செய்துள்ளனர். இதனை அடுத்து குறித்த பெண், காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட காவல்துறை விசாரணைகளின் அடிப்படையில், இந்த கொலைக்கான காரணம் கண்டறியப்பட்டது. இதனை அடுத்து சந்தேக நபர்களான குடும்பத்தார் கைது செய்யப்பட்டதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top