உலகம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு எந்தப் பாதையை நோக்கிச் செல்லும் என்பதை தீர்மானிக்கக் கூடிய அமெரிக்க அதிபர் தேர்தல், எல்லோர் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
இந்தத் தேர்தலின் பிரதான போட்டியாளர்கள் , தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரை எதிர்த்துப் போட்டியிடும் ஜனநாயக கடசியின் வேட்பாளர் ஜோ பைடன்.
2016ல் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் பதவியேற்றத்தில் இருந்து அங்கு உள்நாட்டு அரசியல் மட்டுமல்லாமல், சர்வதேச அரசியல் மற்றும் பன்னாட்டு உறவுகள், நிகழ்வுகள் பெரும் மாற்றத்தை சந்தித்து விட்டன.
அமெரிக்காவை மீண்டும் சிறப்பான நாடாக மாற்றுவேன் என்ற அவரது தேர்தல் கோஷம், அங்கு இருந்த வலது சாரி வெள்ளை இன மக்கள், கிராமப்புற மக்கள், தொழில் நலிவடைந்த பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் தென் அமெரிக்க வம்சா வளியினர் அவருக்கு பெரும்பான்மையாக வாக்களித்தனர்.
இப்போது மீண்டும் தேர்ந்தெடுக்க்கப்பட அவர் வைக்கும் வாதம், இந்த நான்கு ஆண்டுகளில் பொருளாதாரத்தை வலுவடைய செய்தது, சர்வதேச அரங்கில் அமெரிக்க நலனை ஆணித்தரமாக முன்வத்தது, ராணுவத்தை பலமாகியது மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்தியது போன்றவையாகும்.
குடியரசு கட்சி வெல்லும் வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட பென்சில்வேனியா, அரிசோனா மற்றும் விஸ்கான்சின் போன்ற மாகாணங்களில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் குடியரசு கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலை வகித்தார்.
இந்த தேர்தலில் மிக குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் இளைஞர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இது அமெரிக்க தேர்தலை பெரிய மாற்றத்தை கொண்டு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.