Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
03
தலைமறைவானார் நடிகை தீபிகாவின் முகாமையாளர்

Sooriyan Gossip - தலைமறைவானார் நடிகை தீபிகாவின் முகாமையாளர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

888 Views
பொலிவூட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் அதிர்வலையோடு தொடர்புபட்டு நீளும், திரைத்துறை சார்ந்தோரின் போதைப்பொருள் பாவனை தொடர்பான காவல்துறை விசாரணை வளையத்துக்குள் முன்னணி நட்சத்திர நடிகை தீபிகா படுகோனேவும் அகப்படுவார் என்று ஹிந்தித் திரையுலகம் கிசுகிசுக்கின்றது.
நடிகை தீபிகா படுகோனேவின் தொழிற்துறை சார்ந்த முகாமையாளரான கரிஷ்மா பிரகாஷ், போதைப்பொருள் பாவனை தொடர்பான காவல்துறையின் விசாரணைக்குள் அகப்பட்டுள்ளதுடன், மும்பை வெர்சோவாவில் உள்ள அவரது வீட்டில் ஒக்டோபர் 27ம் திகதி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திடீரென சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

குறித்த அதிரடி நடவடிக்கையில், 1.8 g கஞ்சா போதைப்பொருள் சிக்கியதோடு, கஞ்சா செடியில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட 2 போத்தல் எண்ணெய்யும் காவல்துறை போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளால் கைப்பட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளால் அனுப்பப்பட்ட அழைப்பாணையில், கடந்த 28ம் திகதி தமது அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு குறிப்பிட்டிருந்தபோதும், கரிஷ்மா பிரகாஷ் தம்மிடம் முன்னிலையாகவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியிருந்ததற்கு, 'தற்போது கரிஷ்மா பிரகாஷ் மும்பையில் இல்லை' என்று அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "நாங்கள் பலமுறை அனுப்பிய அழைப்பாணையை ஏற்று இன்னமும் கரிஷ்மா பிரகாஷ் விசாரணைக்கு முன்னிலையாகவில்லை.குறித்த அழைப்பாணைக்கு பதில் தெரிவிக்கவும் இல்லை. அவர் எங்கு இருக்கின்றார் என்பதை இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top