SooriyanFM Gossip - சனம் பக்கம் சாய்ந்த பாலாஜி - காணொளி உள்ளே...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
855 Views
பிக்பொஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரமோவில்,பாலாஜி கொந்தளிப்பது குறித்த காட்சிகள் வெளிவந்துள்ளன. இன்றைய தினம் போட்டியாளர்களுக்கு நீதிமன்ற டாஸ்க் வழங்கப்படுகின்றது.
இந்த டாஸ்கில் பாலாஜி - சனம் இடையில் இடம்பெற்ற மோதல் குறித்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. அதனை தொடர்ந்து சனம் மற்றும் சுரேஷ் இருவருக்கும் இடையில் இடம்பெற்ற முரண்பாடு குறித்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
இதன்போது இரண்டாவது வழக்கு விசாரணையின் போது, யாரும் எதிர்பார்க்காத வகையில், சனம் ஷெட்டிக்கு ஆதரவாக பாலாஜி வாதாடுகிறார்.
அனல் பறக்கும் இந்த வாதத்தின் முடிவில், சனம் ஷெட்டிக்கு ஆதரவாக பாலாஜி வாதாடியிருக்க கூடாது என, அர்ச்சனா கூறுகிறார். அதற்கு ’'நான் என்னுடைய விளையாட்டை விளையாடுகிறேன், யார் தோல்வி அடைகிறாரோ அவரை வெற்றி பெறச் செய்வது தான் கெத்து'' என பாலாஜி ஆவேசமாகக் கூறுகின்றார்.
இந்த ப்ரோமோவின் மூலம் இன்றைய நிகழ்ச்சி விறுவிறுப்பாக இருக்கும் என, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.