Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
04
'இரண்டாம் குத்து'க்கு தடையா....? - விளக்கம் கோரும் நீதிமன்றம்.

Sooriyan Gossip - 'இரண்டாம் குத்து'க்கு தடையா....? - விளக்கம் கோரும் நீதிமன்றம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

177 Views
'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படத்தின் அடுத்த பாகமாக வரவுள்ள "இரண்டாம் குத்து" படத்தை, இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் தானே நடித்து இயக்குள்ள நிலையில், அந்தப் படத்தை தடை செய்யுமாறு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால் இந்தப் படம் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.
"இரண்டாம் குத்து" திரைப்படத்தை வெளியீடு செய்வதற்கு தடை விதிக்கவும், சமூக வலைத்தளங்களினூடாக வெளியான இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சியை அவற்றிலிருந்து அகற்றுவதற்கு உத்தரவிடுமாறு கோரியும் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அது தொடர்பில் பிரதிவாதிகளை விளக்கமளிக்குமாறு கூறும் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தாக்கல் செய்யப்பட்ட குறித்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகளான கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் தெரிவிக்கையில், "முன்பு வந்த திரைப்படங்களான பாசமலர் போன்ற படங்கள் குடும்ப உறவுகளைப் பற்றி இருந்தது. ஆனால் தற்போது தகாத வார்த்தைகள், இரட்டை அர்த்தங்கள் ஆகியவற்றை படத்தில் கொண்டுவந்து படத்திற்கான விளம்பரத்தை தேடுகின்றனர். இதைவிட, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் மெகா தொடர்கள் ஆபாசமான பேச்சுகள், வசனங்கள், தகாத உறவுகள் ஆகியவற்றைப் பற்றியதாகவே உள்ளன. இதற்கு தணிக்கைக்குழு எதுவும் கிடையாதா...?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மனுதாரர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி தமது தரப்பு வாதத்தை முன்வைக்கையில், "இரண்டு என்று இணையதளத்தில் தேடுதல் செய்தால் இந்தப்படத்தின் டீசர் தான் முதலில் வருகிறது. இதனைப் பார்க்கும் மாணவ மாணவிகளின் மன நிலையில் பாதிப்பு ஏற்படுவதனால் குற்ற சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது" என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பு வாதத்தை பதிவுசெய்து கொண்ட நீதிபதிகள் யூடியூப், பேஸ்புக், கூகுள் மற்றும் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் உட்பட்ட படக்குழுவினருக்கு நீதிமன்றத்தின் உத்தரவை அனுப்ப அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன், மத்திய தணிக்கை குழு, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை ஆகியவற்றை எதிர் மனுதாரர்களாக இணைத்துள்ள நீதிபதிகள், தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் மத்திய, மாநில அரசாங்கங்கள் தமது தரப்பு விளக்கத்தை முன்வைக்க வேண்டும் என உத்தரவிட்டு எதிர்வரும் 20ம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top