பி.வாசு தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி உள்ளார்.
பி.வாசுவின் மகளுக்கு சென்னையில் திருமணம் நடைபெற இருக்கிறது.
‘சந்திரமுகி,’ ‘சின்ன தம்பி,’ ‘வால்டர் வெற்றிவேல்’ உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய பி.வாசுவுக்கு, சக்தி வாசு என்ற மகனும், அபிராமி என்ற மகளும் இருக்கிறார்கள். மகன் சக்தி வாசு, தமிழ் பட உலகின் இளம் கதாநாயகர்களில் ஒருவராக இருக்கிறார்.
மகள் அபிராமிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. மணமகன் பெயர் பொன் சுந்தர். இவர் செங்கல்பட்டை சேர்ந்த ஐ.ஆர்.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணனின் மகன் ஆவர்.
இவர்களின் திருமணம் வருகிற 11-ந் திகதி காலை 9 மணிக்கு சென்னை அடையாரில் உள்ள கிரவுன் பிளாசா நட்சத்திர விடுதியில் நடைபெற இருக்கிறது. .
அன்று மாலை 6 மணிக்கு மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி அதே நட்சத்திர விடுதியில் நடைபெற இருக்கிறது.