Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
09
‘பொறுப்பான பெண்மணி என் அம்மா’ - கமலா ஹாரிஸ் உருக்கம்

sooriyan gossip - ‘பொறுப்பான பெண்மணி என் அம்மா’ - கமலா ஹாரிஸ் உருக்கம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

367 Views
அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணி, முடிவை அறிவிப்பதில் இருந்த இழுபறி நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. அதிபர் தேர்தலில் 77 வயதான ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றிருக்கிறார். துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த 56 வயதான கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதையொட்டி கமலா ஹாரிஸ், டெலவாரே மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் வெற்றி உரை ஆற்றினார். அப்போது அவர் தமிழ்நாட்டின் மன்னார்குடி பகுதியை சேர்ந்த தனது தாயார் சியாமளா கோபாலனை உருக்கமுடன் நினைவுகூர்ந்தார்.

அமெரிக்க மக்களே, நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்கழித்திருக்கலாம். கவலை இல்லை. ஆனால் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு எவ்வாறு விசுவாசமான, நேர்மையான, தயார்நிலையிலான துணை ஜனாதிபதியாக ஒவ்வொரு நாளும் உங்களைப்பற்றியும், உங்கள் குடும்பங்களைப் பற்றியும் சிந்தித்தவாறே கண்விழித்த ஜோ பைடனைப்போன்று, நானும் இருக்க முயற்சிப்பேன். இப்போது முதல் எனது பணி தொடங்குகிறது. நீங்கள் அமெரிக்காவுக்கு ஒரு புதிய நாளை உறுதிப்படுத்தி இருக்கிறீர்கள்.

இன்று நான் இந்த இடத்தில் இருப்பதற்கு மிகவும் பொறுப்பாக செயல்பட்ட பெண்மணி எனது அம்மா சியாமளா கோபாலன். என் அம்மா எப்போதும் எங்கள் இதயத்தில் வீற்றிருக்கிறார். அவர் 19 வயதில் இந்தியாவில் இருந்து இங்கு வந்தபோது இந்த தருணத்தை நினைத்து பார்த்திருக்க மாட்டார். ஆனால் இது போன்ற ஒரு தருணம், அமெரிக்காவில் சாத்தியமான ஒன்று என்று அவர் மிகவும் நம்பினார். எனவே நான் அவரையும், பெண்களின் தலைமுறைகளையும் அதுவும் கருப்பினப் பெண்களையும் எண்ணிப்பார்க்கிறேன்.

கருப்பின பெண்கள் உள்பட அனைவருக்குமான சமத்துவத்துக்காகவும், விடுதலைக்காகவும், நீதிக்காகவும் இவ்வளவு போராடி பெரும் தியாகங்கள் செய்தவர்கள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போய் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள்தான் நமது ஜனநாயகத்தின் முதுகெலும்பு என்பதை அடிக்கடி நிரூபிக்கிறார்கள்.

நம்மிடம் உள்ள சிறந்தவற்றை பிரதிநிதிப்படுத்தும் ஒரு அதிபரை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். அவர் உலகம் மதிக்கும் தலைவர். அதை குழந்தைகள் கவனிக்க முடியும். அவர், நமது படைகளை மதிக்கும் தலைமை தளபதி. அவர், நமது நாட்டையும் பாதுகாப்பாக வைத்திருப்பார். அவர் அனைத்து அமெரிக்கர்களுக்குமான ஜனாதிபதியாக விளங்குவார். என அவர் கூறினார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top