Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
22
எரிமலைச் சாம்பலில் கிடைத்த ரோமப் பேரரசின் ஆண்டான் - அடிமை உடல்கள்.

Sooriyan Gossip - எரிமலைச் சாம்பலில் கிடைத்த ரோமப் பேரரசின் ஆண்டான் - அடிமை உடல்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

354 Views
ஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய ரோமப் பேரரசின் பாம்பேய் நகரம்  எரிமலைக் குழம்பால்   மூழ்கியது.

இந்த எரிமலைச் சீற்றத்தில் இறந்த, இரண்டு மனிதர்களின் எச்சங்களை இத்தாலியிலுள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதில் ஒருவர், அநேகமாக உயர்ந்த அந்தஸ்த்தைக் கொண்டிருந்தவராக இருக்கலாம் என்றும், மற்றவர் அவரது அடிமையாக இருக்கலாம் என்றும், தொல்பொருள் பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இறந்தவர்கள் எரிமலை வெடித்துச் சிதறியபோது தஞ்சமடைய இடம் தேடி இருக்கலாம் என்றும், அந்தநேரம் எரிமலைக் குழம்பால் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் எனவும் தொல்பொருள் பூங்காவின் இயக்குநர் கூறியிருக்கிறார்.

கி.பி 79 இல் வெசுவியஸ் என்ற எரிமலையின் சீற்றத்தால் மொத்த பாம்பேய் நகரமும் மூழ்கியது.

இந்த எரிமலைச் சீற்றம் பாம்பேய் நகரத்தையும் அங்கு குடியிருந்தவர்களையும் சாம்பலில் புதைத்து விட்டது. தற்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த இடம், ஆய்வு செய்வதற்கான ஒரு வளமான ஆதாரமாக மாறி இருக்கிறது.

இந்த மாதம் பண்டைய பாம்பேய் நகரத்தின் புறநகரில் ஒரு பெரிய மாளிகை போன்றதொரு வீட்டை அகழ்வாராய்ச்சி செய்த போது தான், இந்த இரண்டு எச்சங்களையும் கண்டெடுத்துள்ளனர்.

புதைந்துபோன அந்தச் செல்வந்தர் 30 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது கழுத்துக்கு கீழே கம்பளி ஆடையின் தடயங்கள் காணப்பட்டன.

மற்றொரு மனிதர், 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்கலாம் என்று, தொல்பொருள் தள அதிகாரிகள் தெரிவித்தனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top