கிருஷ்ணகிரி அருகே நடைபெற்று வரும் விஜய் சேதுபதியின் லாபம் படத்தின் படப்பிடிப்பு பொலிஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் லாபம்.விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார்.மேலும் ஜெகபதிபாபு,கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பை காண சுற்றுவட்டார பகுதி மக்கள் அதிகளவில் வருவதாக கூறப்பட்டது.
அனைவரும் முகக்கவசம் அணியாமல் ,சமூக இடைவெளியை பின்பற்றாமை காரணமாக கொரோனா பரவும் சூழல் ஏற்பட்டதால் படப்பிடிப்புக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது பொலிஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.