நகைச்சுவை நடிகராக அறிமுகமான சந்தானம் இப்போதும் கதாநாயகனாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் அவருடைய மகனும் திரைத்துறையில் கால்பதிக்கிறார்.
சந்தானம் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் டிக்கிலோனா விரைவில் வெளிவர இருக்கும் நிலையில் அடுத்து பிரபு தேவா நடிக்க இருக்கும் புதிய படத்தில் சந்தானத்தின் மகன் நிபுன் நடிக்க தயாராகிவிட்டதாக சொல்லப்படுகிறது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் நிபுனை சுற்றியே திரைப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது.
மஞ்சப்பை,கடம்பன் திரைப்படங்களை இயக்கிய ராகவன் இந்த திரைப்படத்தையும் இயக்குகிறார்.