சமூகத்தில் சிறு குற்றங்களில் தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலையான உண்மை கைதிகளை வைத்து புதிய படம் ஒன்று தயாராக உள்ளது.
ஏற்கனவே திருமணம் எனும் நிக்கா படத்தை இயக்கிய அனிஸ்,அடுத்ததாக சசிகுமாரை வைத்து பகைவனுக்கு அருள்வாய் என்ற புதிய படத்தை இயக்குகிறார்.இப்படத்திற்கான பூஜை அணமையில் நடைபெற்றது.
சமூக கருத்துடன் கூடிய த்ரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் நாயகிகளாக வாணிபோஜன் மற்றும் பிந்து மாதவி ஆகியோர் நடிக்க உள்ளனர்.
கைதிகளை அடிப்படியாக வைத்து உருவாகும் இந்த திரைப்படத்தின் கதையம்சத்திற்காக சிறைத்தண்டனை பெற்று அண்மையில் விடுதலையான நிஜ குற்றவாளிகளை திரைப்படத்துறையினர் அணுகி பேச்சுகளை நடத்தியுள்ளனர்.