அம்மா மகன் பாசப்பிணைப்பை மீண்டும் கொண்டு வருகிறது தல அஜித் நடிக்கும் வலிமை திரைப்படம் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஏற்கனவே அஜித் நடித்த வரலாறு திரைப்படமும் அம்மா மகன் பாசத்தை கொட்டித் தீர்த்திருந்தது. அதே போல மீண்டும் ஒரு கதைக்களம் உருவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வலிமை திரைப்படத்தில் அம்மா பாடல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும், யுவன் சங்கர் ராஜா இசையால் உருக வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஈஸ்வர மூர்த்தி என்ற பெயரில் காவல்துறை அதிகாரியாக அஜித் நடிக்கும் வலிமையின் படப்பிடிப்புக்களை எதிர்வரும் மாதத்திற்குள் நிறைவு செய்வதற்காக அஜித் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
தல அஜித்தின் 50வது பிறந்த நாள் அன்று இந்த படத்தை திரையிடுவதற்கான முயற்சியில் படக்குழு இறங்கியிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.