Big boss 75 நாட்களைக்கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இறுதியாக நேற்று வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட அர்ச்சனா தனது மகளுடன் வீட்டில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே தற்போது மிக பிரபலமடைந்த ஒரு நிகழ்ச்சியாக உலக நாயகன் தொகுத்து வழங்கும் big boss இருந்து வருகிறது.கடந்த ஒக்டோபர் மாதம் 4ம் திகதி ஆரம்பமான இந்த நிகழ்சியில் 16 போட்டியாளர்கள் ஆரம்ப நாளில் வீட்டிற்கு அனுப்பப்பட்டிருந்தாலும் சில தினங்களில் பாடகி சுசித்ரா மற்றும் அர்ச்சனா ஆகியோருடன் 18 ஆகியது.
இந்த நிலையிலே அன்புக்குடும்பத்தின் தலைவியாக இருந்த அர்ச்சனா நேற்று வெளியேற்றப்படிருந்தார்.வீட்டின் தலைவர் ஒருவர் வெளியேற்றப்பட்ட சம்பவமும் நேற்றே நடந்தது.இந்த நிலையில் அர்ச்சனா வீடு வந்து சேர்ந்ததும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது மகளை சந்தித்துள்ளார்.தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் ஜாரா, மை பாஸ்ஸி குமாரு திரும்ப வந்துவிட்டார்.கடவுள் இருக்கான் குமாரு.. அன்பு உண்மைதான் குமாரு என்று எழுதியுள்ளார்.