தளபதியின் மாஸ்டர் திரைப்படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகம் இருப்பதால் அதை நீக்க தணிக்கை குழு அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளதாகவும் அதற்கு படக்குழு சம்மதம் தெரிவிக்காத பட்சத்தில் ‘மாஸ்டர் A' சான்றிதழ் பெற்றே வெளிவர வாய்ப்பிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
மாஸ்டர் திரைப்படத்தில் 9 இடங்கள் துண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவை மிக வன்முறை தன்மையுடயவையாக இருப்பதாகவும் தணிக்கை குழு அறிவித்துள்ளது.அதனை படக்குழு ஏற்கும் பட்சத்தில் எதுவித தடங்கலும் இருக்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சித்திரைக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்ட மாஸ்டர் கொரோனா பரவல் காரணமாக பிற்போடப்பட்டு,படம் வரும் தைப்பொங்கல் அன்று வெளியாகும் எதிர்பார்ப்பு உள்ளது.மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி பேராசிரியராக விஜய் நடிக்க அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதியும்,ஜோடியாக மாளவிகா மோகனனும் நடித்துள்ளனர்.
படத்தின் பாடல்கள்,டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் வெளியீடு உறுதி செய்யப்பட்டால் 2021 புத்தாண்டு தினத்தில் மாஸ்டர் ட்ரெய்லர் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.இதே வேளை சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படமும் தைப்பொங்கல் வெளியீடாக வெளிவரும் என நம்பப்படுகிறது.