ஒரே கல்லில் இரண்டு மாங்காய் இப்போது நயன்தாராவுக்கு கிடைத்துள்ளது அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொண்டே காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படக்குழுவினரை நயன்தாரா ஹோட்டலில் சந்தித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவல் ஆகியுள்ளன.
'சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ரஜினி - நயன்தாரா நடிக்கும் அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அதேபோல,நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி,சமந்தா,நயன்தாரா நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்புகளும் தற்போது ஹைதராபாத்தில்தான் நடைபெற்று வருகிறது.
இப்போதைக்கு நயன் அண்ணாத்த படப்பிடிப்பில் இருப்பதால் விஜய் சேதுபதி ,சமந்தா தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம்.ஆனாலும் தனது காதலரை அடிக்கடி சந்திக்க நயன் காத்து வாக்குல ரெண்டு காதல் படக்குழுவினரையும் சந்தித்து வருகிறார்.அதன் போது ஹோட்டல் ஒன்றில் எல்லோரும் ஒன்றாக உணவருந்தும் போட்டோ ஒன்றும் வைரலாக ஆரம்பித்துள்ளது.