பல போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவர்கள் அடுத்த கட்டத்தையும் ஆரம்பித்துள்ளனர்.இதேவேளை இம்முறை Big Boss வீட்டிற்குள் அன்பு கூட்டணி உருவானது.அதனை தொடர்ந்து அன்பு கூட்டணியில் இல்லாத ஏனைய போட்டியாளர்களால் பிரச்சினைகளும் இக் கூட்டணி மீது அதிகரித்தது.அர்ச்சனா,ரியோ,ஜித்தன்ரமேஷ்,நிஷா,சோம்,கேப்ரியலா ஆகியோர் அன்பு கூட்டனியில் இருந்தனர்.
அன்பு கூட்டணியின் உறுப்பினர்கள் பலர் வீட்டை விட்டு வெளியேற்றப்படதையடுத்து,இப்போது ரியோ,சோம்,கேப்ரியலா மட்டுமே வீட்டினுள் போட்டியிடுகிறார்கள்.இந்த நிலையில் big Boss வீட்டிலிருந்து வெளியேறிய அர்ச்சனா,ரமேஸ்,நிஷா வெளியில் ஒன்றாக சந்தித்து புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்குறார்கள்.அதேபோல் 'நம் வாழ்க்கையில் நாம் உருவாக்கும் நட்பின் பிணைப்புகள் கடினமான தடைகளைக் கூட எளிதில் கடந்து செல்ல உதவுகின்றன' "மூழ்காத ஷிப்பே பிரண்ட்ஷிப்தான்” எனவும் அர்ச்சனா குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.