முதுகுத் தண்டு நரம்பு நாளங்களால் ஆனது. இதிலிருந்து 12 இணை நரம்புகள் மூளைக்குச் செல்கிறது. மேலும் முப்பத்தாறு இணை நரம்புகள் உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. அதனால் முதுகுத்தண்டு மனிதனின் இரண்டாவது மூளை என அழைக்கப்படுகின்றது.
மனிதனின் உடல் உள் உறுப்புக்கள் பழுதடைந்தால், ஒழுங்காக இயங்கவில்லை என்றால் அது முதுகெலும்பில் உள்ள வலியை உணர்த்துகின்றது.
கழுத்து மற்றும் முதுகுவலி ஏற்பட்டால் இதயம், நுரையீரல் ஒழுங்காக இயங்கவில்லை என்று அர்த்தம்.
மூளைக்கும், உடலின் உறுப்புகளுக்கும் இணைப்பு நிலையமாக திகழ்வது இந்த முதுகுத் தண்டு தான். மேலும் இதயம், நுரையீரல், இரைப்பை, குடல் முதலிய உறுப்புகளின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதும் இந்த முதுகுத்தண்டு தான்.
மனித உடலில் நடுப்பகுதியான முதுகில் 33 முதுகெலும்புகள் ஒன்றின் மீது ஒன்றாக நேர் வரிசையில் அடுக்கப்பட்டு அற்புதமாக இந்த உடல் கட்டப்பட்டுள்ளது.
இந்த முதுகெலும்பு வழியாகத் தான் முதுகுத் தண்டுவடம் உள்ளே செல்கின்றது. இந்த முதுகெலும்பில் 24 எலும்புகள் தனித் தனியானவை. இது அசையும் தன்மை வாய்ந்தது. மற்ற ஒன்பது எலும்புகள் இணைந்து இரண்டு அசையா எலும்புகளாக பெரியவர்களாக வளரும் பொழுது இடுப்புக்கு அடியில் மாறிவிடும்.
உடல் பயிற்சி செய்யாமல், நன்றாக அதிகம் சாப்பிட்டு தொப்பை போடுபவர்களுக்கு அடி முதுகுவலி வரும். சிறுநீரகப் பிரச்சினை இருக்கும். இவர்களுக்கு நடுமுதுகுவலியும் வரும். சிறுகுடல், பெருங்குடல் பிரச்சனை என்பன இருக்கும்.
அதிக நேரம் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு அடி முதுகுவலி வரும்.
தொடர்ந்து அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு, உடற் பயிற்சி செய்யாதிருந்தால் முதுகுவலி ஏற்படும்.
ஒரே இடத்தில் பல மணி நேரம் நின்று வேலை செய்பவர்களுக்கும் முதுகுவலி ஏற்படும்.
அடிக்கடி சளி பிடித்தல், மூக்கடைப்பு, இருமல் உள்ளவர்களுக்கு கழுத்து, முதுகுவலி ஏற்படும். நுரையீரல் பழுதடைவதால், கழுத்து முதுகுவலி வருகின்றது.
அதிகம் கவலைப்படுபவர்களுக்கு இதயம் பாதிக்கப்படுவதால், கழுத்து முதுகுவலி ஏற்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகி அதனால் அடிக்கடி காய்ச்சல் வருபவர்களுக்கு முதுகு முழுவதும் வலி இருக்கும்.
காய்ச்சல் எல்லாம் நோயல்ல கழிவுகள் வெளியேற்றம்தான். ஏதாவது ஒரு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிமுதுகுவலி, கழுத்து முதுகு வலி ஏற்படும் என, மருத்துவர்கள் கூறுகின்றனர்.