Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
24
பொங்கல் போட்டியில் முந்தத் தயாராகும் "பூமி"

SooriyanFM Gossip - பொங்கல் போட்டியில் முந்தத் தயாராகும் "பூமி"Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

319 Views
"ஜெயம்" படத்தின் மூலம் திரைத்துறைக்குள் நாயகனாக கால் பதித்து அந்தப் படத்தின் பெரும் வெற்றியுடன் கூடிய ரசிகர்களின் வரவேற்பினால், தற்போது வரைக்கும் பல படங்களில் நடித்துள்ள நடிகர் ஜெயம் ரவியின் "பூமி" திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. 

கடந்த மே மாதம் திரைகாணவிருந்த "பூமி" திரைப்படம் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக, தற்போதுவரை முடங்கிக்கிடக்கும் நிலையில், இந்தப் படத்தை OTT தளத்தினூடாக ரசிகர்களை சென்றடையும் வகையில் வெளியீடு செய்யவுள்ளதாக, படக்குழுவினர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

'ஹோம் மூவி மேக்கர்ஸ்' படத் தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளதோடு, ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து 2 படங்களை உருவாக்கிய இயக்குனர் லட்சுமணன் இந்தப் படத்தையும் செதுக்கியுள்ளார்.

"பூமி" திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் இணைந்துள்ள நிலையில், சரண்யா பொன்வண்ணன், சதீஷ், தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.

இது இப்படியிருக்க, ஜெயம் ரவி நடிப்பில் 25வது திரைப்படமாக வெளியாகவுள்ள "பூமி" திரைப்படத்துடன் பொங்கல் வெளியீட்டில் போட்டி போடுவதற்காக நடிகர் மாதவன் நடிப்பில் தயாராகியுள்ள "மாறா" மற்றும் விஷாலின் "சக்ரா" போன்ற படங்களும் காத்திருப்பதாக அந்தந்தப் படங்களின் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top