தளபதி விஜய் மற்றும் தல அஜித் மோதல் என்பது அவர்கள் நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து, ரசிகர்களிடையே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அவர்களுக்குள் தனிப்பட்ட ரீதியில் எந்தவிதமான சண்டையோ முரண்பாடுகளோ இல்லை என்றாலும் ரசிகர்களுக்கிடையில் அது கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. அதிலும் சமூகவலைத்தளப் பாவனைகள் மலிவான பின்பு அது இன்னும் அதிகமாகி விட்டது.
இப்படியிருக்க அண்மையில் விஜயின் நண்பரும் நடிகருமான சஞ்ஜீவ் அண்மையில் ஒரு பேட்டியின்போது அஜித் பற்றிச் சொன்ன ஒரு விடயம் சின்ன சல சலப்பொன்றை உருவாக்கியிருக்கிறது.
தானும் இன்னொரு நண்பரும் பட விடயம் சம்பந்தமாக அஜித்தை சந்திக்கச்சென்ற நேரம், தாங்கள் விஜயின் நெருங்கிய நண்பர்கள் எனத்தெரிந்தும் தங்களிடம் உங்கள் நண்பன் விஜயை நான் ஒருநாள் ஜெயித்துக்காட்டுவேன் என்று சொன்னாராம்.
இதை விஜயிடம் அப்படியே அவர்கள் வந்து சொல்ல தளபதியும் சிரித்து விட்டு இதை வெளிப்படையாகச் சொல்ல ஒரு மனசு வேண்டும் என்றாராம்.