பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் கடந்த அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது.தற்போது 80 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த சீசனில் முதல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தவர் அர்ச்சனா.பிக்பாஸ் வீட்டுக்குள் அன்புதான் ஜெயிக்கும் என்று தொடர்ச்சியாக கூறி வந்த அர்ச்சனா,தன்னுடைய தலைமையில் ஒரு குரூப்பை உருவாக்கி வைத்திருந்தார்.
ரியோ,நிஷா,ஜித்தன்ரமேஷ்,கேபி,சோம் ஆகியோர் அதில் இடம்பெற்று இருந்தனர்.அந்த குரூப்பிற்கு அன்பு கேங் என்றும் அழைத்து வந்தனர்.இதைப்பார்த்த இதர போட்டியாளர்கள் அர்ச்சனா குரூப்பிஸம் செய்து வருவதாக குற்றம் சாட்டினர்.ரசிகர்களும் அதே மனநிலையில் இருந்ததால் கடந்த வாரம் அர்ச்சனா வெளியேற்றப்பட்டார்.
இதனை தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னுடைய ரசிகர்களுடன் அர்ச்சனா கலந்துரையாடினார்.அப்போது ரசிகர் ஒருவர்,“அர்ச்சனா சமையல்,டாஸ்க் மற்றும் என்டெர்டெய்ன்மெண்ட் ஆகிய விஷயங்களில் டாப்பராக இருந்தார்.ஆனால் ஆரியிடம் அன்பை காட்டுவதில் மட்டும் தோற்று விட்டார்” என்று தெரிவித்திருந்தார்.அதற்கு பதிலளித்த அர்ச்சனா, “ஆரிக்கு அன்பு காட்டியது உங்களுக்கு காட்டப்படவில்லை.அதான் பிக்பாஸ்” என பதிவிட்டுள்ளார்.