உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் கொரோனா வைரஸால் அதிகமான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதுடன், பல்லாயிரக்கணக்கானவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்தியாவில் உள்ள மக்களில் பலர், கொரோனா வைரஸ் குறித்து அசமந்தமாக இருப்பதாக நடிகையும், பாடகியான ஸ்ருதி ஹாசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊரடங்கு காலத்தில் இந்தியர்கள் கொரோனா வைரஸ் குறித்து அவதானமாக இல்லாமல், பல தவறுகளை செய்துள்ளதாகவும், இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் என்பது சாதாரணமான சளியோ, இருமலோ அல்லது காய்ச்சலோ அல்ல. இந்த நோயின் வீரியத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே தயவு செய்து பாதுகாப்பான முன் எச்சரிக்கையோடு அனைத்து மக்களும் செயற்பட வேண்டும் என, நடிகை ஸ்ருதி ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.