Big boss மூலம் அண்மைய நாட்களில் பேசப்பட்ட அனிதா சம்பத்தின் அப்பா திடீரென உயிரிழந்துள்ளார்.
Big boss மூலம் பலர் அறிந்து கொள்வதற்க்கு முன்னர் தமிழ் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்து மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் அனிதா சம்பத்.Big Boss 4-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அத்துடன் நிகழ்ச்சியின் போது தான் வளர்ந்த விதம்,எதிர்கொண்ட பொருளாதார பிரச்னைகளைக் கூறிய அனிதா தன்னுடைய அப்பாவின் அன்பு தனக்கு பெரிதாக கிடைக்கவில்லை எனவும் கூறியிருந்தார்.இந்த நிலையில் திருத்தல யாத்திரை சென்றிருந்த அனிதாவின் தந்தை வீடு திரும்பும் போது பயண நேரத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.அத்துடன் big Boss நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய அனிதா அவருடைய தந்தையை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனிடையே அனிதா தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படத்தை நேற்று பதிவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.