ஆசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் பிரைவேட் லிமிட்டட்டின் தலைவர் திரு. ரெய்னோ சில்வாவின் பிறந்த தினம் நேற்றாகும்.
சகல இயக்குனர்கள், பிரிவின் தலைவர்கள், சிரேஷ்ட முகாமையாளர்கள் மற்றும் ஹிரு ரி.வி., ஹிரு எப்.எம்., சண் எப்.எம்., கோல்ட் எப்.எம். சூரியன் எப்.எம். மற்றும் ஷா எப்.எம். என்பனவற்றைச் சேர்ந்த பணியாளர்கள் இந்த விசேட நிகழ்வை கொண்டாட உலக வர்த்தக மத்திய நிலையத்தில் கூடி தமது தலைவருக்கு வாழ்த்தினை தெரிவித்தனர்.
ஒலிபரப்பு துறை மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் துறைகளில் சிறந்த அனுபவத்தைக் கொண்ட திரு. ரெய்னோ சில்வா, தனது 24வது வயதில் தனியார் வானெலி வலைப்பின்னலை - வரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தை ஸ்தாபித்தார். தற்போது அவர் புகழ்பெற்ற வர்த்தகராவர். தற்போது இலங்கையில் ஒலிபரப்புத் துறையில் மிக சிரேஷ்ட வானொலி ஜம்பவானாக திகழ்கிறார். தற்போது, ஹிரு எப்.எம். கோல்ட் எப்.எம்., சண் எப்.எம்., சூரியன் எப்.எம்., ஷா எப்.எம். மற்றும் ஹிரு ரி.வி. முதல் தரத்தை பெற்றுள்ளதுடன் எல்லோராலும் விரும்பப்படும் நிலையமாக திகழ்கின்றது. உண்மையான ரசிகர்களை தன்னகத்தே உள்ளடக்கியதாக அது மாறியுள்ளது.
நாங்கள், வரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம், இந்த விசேட தினத்தில் எங்கள் குழும தலைவர் திரு. ரெய்னோ சில்வாவிற்கு 'மிக சிறந்த பிறந்த தின" வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் எதிர்காலத்தில், அவர் எடுக்கும் சகல முயற்சிகளும் வெற்றியளிக்க வேண்டும் என வாழ்த்துகிறோம்.