இயக்கனர் செல்வராகவன் இயக்கிய படங்களில் இரண்டாம் பாகம் எப்போது எடுப்பீர்களென்று ரசிகர்கள் அதிகம் கேட்கும் படங்கள் இரண்டு.
அதில் ஒன்று தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை. மற்றையது கார்த்தி,பாரத்திப்பன்,ஆண்ரியா,ரீமாசென் என்று பல நட்சத்திங்கள் நடித்து 2010 இல் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படமாகும்.
சோழ வரலாற்றைப் பின்னணியாக கொண்டு வித்தியாசமான திரைக்கதையில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவத்தை இந்தப்படம் கொடுத்தது.
வசூல் ரீதியாக பெரியசாதனை படைக்கவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு இந்தப்படத்துக்குக் கிடைத்தது. இதன் இரண்டாம் பாகம் வரும் என்று ஏற்கனவே செல்வராகவன் சொல்லியிருந்த நிலையில், இப்போது அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தனுஷ் நடிப்பில் 2024 ம் ஆண்டு இரண்டாம் பாகம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தனுஷும் தன் Twitter பக்கத்தில் சோழனின் பயணம் தொடரும் என்று பதிவிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.