வெள்ளித் திரையிலும், சின்னத்திரைத் தொடர்களிலும் தடம் பதித்து வரும் நடிகை நீலிமா ராணிக்கு
Instagram சமூக வலைத்தளத்தின் மூலம் ஆபாசமான கேள்வி ஒன்றை ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்.
நடிப்புத்துறைக்குள் குழந்தை நட்சத்திரமாக "தேவர் மகன்" திரைப்படத்தின் மூலம் கால் பதித்த நடிகை நீலிமா ராணி, பல திரைப்படங்களின் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தாலும், மிரட்டும் வில்லி பாத்திரமேற்று பெருமளவில் சின்னத்திரை மூலமாகவே ஒவ்வொரு குடும்பத்திலும் சென்று சேர்ந்தவர்.
தற்போது, பல கோணங்களில் விதவிதமாக அழகிய புகைப்படங்களை எடுத்து
Instagram மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்வதுடன், ரசிகர்களோடு கேள்வி பதில் உரையாடல்களையும் மேற்கொண்டு வருகின்றார். இந்தநிலையில், அவரது ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வி ஒன்று அவரை பெரும் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளியிருந்தது.
அதாவது, ஆபாச கருத்துமிக்கதாக 'How much for a night...?' என ரசிகர் கேள்வி கேட்டிருந்த நிலையில், அதற்கு பதிலளித்த நடிகை நீலிமா ராணி, "கொஞ்சம் நாகரீகத்தை எதிர்பார்க்கிறேன் சகோதரா... மற்றவர்களை கேவலமாக பேசுவது வக்கிரபுத்தி. தயவு செய்து ஒரு மனோதத்துவ மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுங்கள்" என கண்ணியமாக பதிலடி கொடுத்துள்ளார்.