உலகின் பணக்காரர்கள் பட்டியலில் Elon Musk முதலிடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் Amazon நிறுவுனர் Jeff Bezos முதலிடத்தில் இருந்தார். அவருக்கு அடுத்த இடத்தை Tesla நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான Elon Musk பிடித்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டை விட Tesla நிறுவனத்தின் பங்கு விலை கணிசமாக உயர்வடைந்தமையினால், Elon Musk வைத்திருந்த சொத்து மதிப்பு அதிகரித்தது. இதன்படி 185 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு Elon Musk சொந்தக்காரர் ஆனார்.
இதனை அடுத்து உலகின் பணக்காரர்கள் பட்டியலில் Elon Musk முதலிடத்திற்கு முன்னேறியுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.